திருவள்ளூரில் நடந்த சர்வதேச எய்ட்ஸ் தினவிழா நிகழ்ச்சியில் பங்கேற்ற எச்.ஐ.வி தொற்று பாதித்த ஒருவர் பக்கத்துக் குடியிருப்புகளைச் சேர்ந்தோர் பாதையில் நடக்க விடாமல் தொந்தரவு செய்வதாக
திருவள்ளூர் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகு சார்பில் சர்வதேச எய்ட்ஸ் தின நிகழ்ச்சி தனியார் அரங்கத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அப்போது, திடீரென எச்.ஐ.வி தொற்றால் பாதித்த ஒருவர் திடீரென தனக்கு தானே பெட்ரோல் ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றார். அப்போது, உடனே விரைந்து வந்த மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுத் திட்ட இயக்குநர் டாக்டர் கெளரிசங்கர் மற்றும் அதிகாரிகள் ஆகியோர் காப்பாற்றி விசாரித்தனர்.
அதில் திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அருகே பட்டாபிராம், மேற்குகோபாலபுரம் பகுதியைச் சேர்ந்த ஐசக் என்பவரின் மகன் சாலமன்(49). இவர் அப்பகுதியில் 3 மகன்களுடன் வசித்து வருகிறாராம்.
இந்த நிலையில் அப்பகுதியில் 4 குடியிருப்புகளைச் சேர்ந்தோர் பாதை வழியாக நடக்கக்கூடாது எனத் தகராறு செய்து வருகின்றனர். இதனால் வேறு வழியின்றி கால்வாயைச் சுற்றிச் சென்று வருகிறேன். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர், துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், பட்டாபிராம் காவல் நிலையத்தில் புகார் செய்தேன். இதுவரையில் எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால், எனது குடும்பத்தினருடன் எங்கும் செல்ல முடியாத நிலையில் ஆத்திரம் அடைந்த நிலையில், பெட்ரோல் ஊற்றிக் கொண்டு தற்கொலைக்கு முயற்சி செய்ததாகவும் அவர் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து அதிகாரிகள் சமாதானம் செய்து கட்டாயம் நடவடிக்கை எடுப்பதாக சமாதானம் செய்து ஜமாபந்தி நிகழ்வில் பங்கேற்க அழைத்துச் சென்றனர்.
எனவே சர்வதேச எய்ட்ஸ் தினவிழா நிகழ்வில் அதிகாரிகள் முன்னிலையில் எச்.ஐ.வி தொற்றால் பாதித்த நபர் பெட்ரோல் ஊற்றித் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.