தமிழ்நாடு

கும்மிடிப்பூண்டியில் அதிமுக தேர்தல் பொறுப்பாளர் அறிமுக ஆலோசனைக் கூட்டம்

1st Dec 2020 11:53 AM

ADVERTISEMENT

 

கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதிக்கு உள்பட்ட மண்டலத்தின் அதிமுக பொறுப்பாளர் அறிமுக, ஆலோசனைக் கூட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கும்மிடிப்பூண்டி ஒன்றிய அதிமுக செயலாளர் வி.கோபால்நாயுடு  தலைமை தாங்கினார்.

இதில் மாவட்ட இலக்கிய அணி நிர்வாகி கோவி.நாராயணமூர்த்தி, கும்மிடிப்பூண்டி ஒன்றிய குழு தலைவர் கே.எம்.எஸ்.சிவகுமார், பொதுக்குழு உறுப்பினர் அபிராமன், நகர செயலாளர் மு.க.சேகர், ஒன்றிய பாசறை செயலாளர் டி.சி.மகேந்திரன், அதிமுக நிர்வாகிகள் எஸ்.எம்.ஸ்ரீதர், முல்லைவேந்தன், தன்ராஜ், சுகுமாறன் முன்னிலை வகித்து கருத்துகளை வழங்கினர்.

நிகழ்வில் பங்கேற்ற திருவள்ளூர் வடக்கு மாவட்ட திமுக செயலாளர் பொன்னேரி எம்எல்ஏ சிறுணியம் பி.பலராமன், கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ கே.எஸ்.விஜயகுமார் கட்சியினருக்கு தேர்தலுக்கு தயாராவதன் முதல் கட்டமாக பூத் கமிட்டியை நியமிப்பது குறித்தும், கிளை செயலாளர்களின் பங்கு குறித்தும் ஆலோசனைகளை வழங்கினார்கள்.

ADVERTISEMENT

நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக மண்டல தேர்தல் பொறுப்பாளரும் அதிமுக அண்ணா தொழிற்சங்க செயலாளருமான கமலகண்ணன் பேசும் போது, அதிமுகவினர் தேர்தலுக்கு தயாராக வேண்டிய நேரம் துவங்கிவிட்டது. கடந்த இரு முறை தமிழகத்தில் அதிமுக அரசு செய்த சாதனைகளை மக்களுக்கு எடுத்துச் சொல்லி வாக்குகளை சேகரிக்க அதிமுகவினர் முனைப்புடன் செயல்படுவதோடு ஒற்றுமையோடும் செயல்பட வேண்டும் என்றார்.

நிகழ்வில் அதிமுக நிர்வாகிகள் டி.ஏழுமலை, சி.எம்.முரளி, இமயம் மனோஜ், எம்.எஸ்.எஸ்.சரவணன், எஸ்.டி.டி.ரவி, டி.இ.முரளி, முன்னாள் கவுன்சிலர்கள் தயாளன், கணபதி, கோபி,  நாகமுத்து உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT