புதுச்சேரி: புதுச்சேரி துறைமுக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை காலை 3-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது.
தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் இலங்கையின் திரிகோணமலைக்கு 600 கி.மீ. தொலைவிலும், புதுச்சேரிக்கு 900 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.
இது அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக மாறவுள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து புதுச்சேரி பழைய துறைமுக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை 3- ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது.
திடீர் காற்றுடன் மழை பொழியக்கூடிய வானிலையால் துறைமுகம் அச்சுறுத்தப்பட்டுள்ளது என்பதை குறிக்கும் இந்த புயல் எச்சரிக்கை கூண்டு உள்ளூர் முன்னறிவிப்பாக ஏற்பட்டுள்ளது.