தமிழ்நாடு

வசந்தகுமாரின் உடலுக்கு பொன். ராதாகிருஷ்ணன், தளவாய் சுந்தரம் உள்ளிட்டோர் அஞ்சலி

30th Aug 2020 09:38 AM

ADVERTISEMENT

மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர் எச். வசந்தகுமாரின் உடலுக்கு பாஜக மூத்த தலைவர் பொன். ராதாகிருஷ்ணன், தமிழக அரசின் தில்லி அரசு பிரதிநிதி தளவாய் சுந்தரம் உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர். 

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி உறுப்பினரும், காங்கிரஸ் கட்சியின் மாநிலச் செயல் தலைவருமான எச்.வசந்தகுமாா் (70) வெள்ளிக்கிழமை காலமானாா். அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

சனிக்கிழமை சென்னை தி.நகரில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இதையடுத்து இன்று காலை அவரது சொந்த ஊரான கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீசுவரத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட்டுள்ளது.

இன்று காலை பாஜக மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான பொன். ராதாகிருஷ்ணன், தமிழக அரசின் தில்லி அரசு பிரதிநிதி தளவாய் சுந்தரம் உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர். மேலும், பல்வேறு கட்சியைச் சார்ந்த பிரமுகர்கள், பொதுமக்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

ADVERTISEMENT

இன்னும் சிறிது நேரத்தில் அவரது உடல் அகஸ்தீசுவரத்தில் அவரது தாய் - தந்தையின் நினைவிடம் அருகே நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT