தமிழ்நாடு

கம்பத்தில் தாய், தந்தையை தாக்கிய பொறியியல் பட்டதாரி தற்கொலை

30th Aug 2020 09:26 AM

ADVERTISEMENT

தேனி மாவட்டம் கம்பத்தில் தாய்-தந்தை தாக்கிய பொறியியல் பட்டதாரி கழுத்தை இறுக்கி தற்கொலை செய்து கொண்டார்.

தேனி மாவட்டம் கம்பம் சின்ன வாய்க்கால் தெருவில், தனியார் பள்ளி எதிர்புறம் குடியிருப்பவர் முருகேசன் (60). ஓய்வு பெற்ற சார்பு ஆய்வாளர். இவரது மனைவி இந்திராணி இவர்களுக்கு மனோஜ் (25 )என்ற மகன் உள்ளார். இவர் பொறியியல் படித்து உள்ளார்.

மனோஜ் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை எழுந்து நான் வெளியே சென்று வருகிறேன் என்று கூற, இந்நேரம் எங்கு போகிறாய், காலையில் செல் என்று கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த மனோஜ் அருகில் இருந்த அரிவாளை எடுத்து தந்தையை தாக்கினார். இதைப் பார்த்த தாய் இந்திராணி அலறவே அவரை தாக்கினார். பின்னர் மனோஜ் அவரது அறையில் நுழைந்து கதவை தாழிட்டுக் கொண்டார்.

ADVERTISEMENT

முருகேசன் தனது மனைவியை அழைத்துக்கொண்டு கம்பம் அரசு மருத்துவமனைக்கு வந்தார். இதுபற்றி தெற்கு காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். போலீஸார் சென்று பார்த்தபோது மனோஜ் பெல்டால் கழுத்தை இறுக்கி படுக்கையிலேயே இறந்து கிடந்தார். போலீஸார் பிரேதத்தை கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags : தேனி
ADVERTISEMENT
ADVERTISEMENT