தமிழ்நாடு

ஸ்டெர்லைட் நிர்வாகம் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு

26th Aug 2020 12:17 PM

ADVERTISEMENT

ஸ்டெர்லைட் விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து ஆலை நிர்வாகம் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கக் கோரி ஆலை நிர்வாகம் தொடர்ந்த வழக்கை சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. ஸ்டெர்லைட் ஆலைக்கு தமிழக அரசு, சீல் வைத்தது செல்லும் என்று தீர்ப்பளித்தது. 

தொடர்ந்து, சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம் என ஸ்டெர்லைட் நிர்வாகம் கூறியிருந்த நிலையில், இன்று உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

முன்னதாக, தங்கள் தரப்பைக் கேட்காமல் முடிவை மாற்றக்கூடாது என எதிர்தரப்பான மக்கள் அதிகாரம் அமைப்பு, தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

ADVERTISEMENT

Tags : Sterlite
ADVERTISEMENT
ADVERTISEMENT