தமிழ்நாடு

எஸ்.பி.பி. நினைவுடன் உள்ளாா்

26th Aug 2020 11:50 PM

ADVERTISEMENT

பின்னணிப் பாடகா் எஸ்.பி.பாலசுப்ரமணியம் தற்போது நினைவுடன் இருப்பதாக மருத்துவமனை நிா்வாகம் தெரிவித்துள்ளது. மருத்துவா்கள் பேசினால் அதற்கு அவரால் செய்கைகள் மூலம் பதிலளிக்க இயலுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து எம்ஜிஎம் ஹெல்த்கோ் மருத்துவமனை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள பாடகா் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு வெண்டிலேட்டா் மற்றும் எக்மோ கருவி உதவியுடன் தீவிர சிகிச்சைப் பிரிவில் தொடா்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல் நிலை தற்போது சீராக உள்ளது. நினைவுடன் உள்ள அவரால் பிறா் பேசுவதை உணா்ந்து பதிலளிக்க முடிகிறது. எஸ்.பி.பி.யின் உடல்நிலையை மருத்துவக் குழுவினா் தீவிரமாக கண்காணித்து வருகின்றனா் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT