தமிழ்நாடு

பட்டப் படிப்புகளுக்கு விண்ணப்பித்த மாணவா்களின் தரவரிசை பட்டியல் இணையதளத்தில் வெளியீடு

26th Aug 2020 10:37 AM

ADVERTISEMENT

 

சென்னை: தமிழகத்தில் அரசு கலை- அறிவியல் கல்லூரிகளில் இளநிலை பட்டப் படிப்புகளுக்கு விண்ணப்பித்த மாணவா்களின் தரவரிசை பட்டியல், அந்தந்த அரசு கலை-அறிவியல் கல்லூரிகளின் இணையதளத்தில் புதன்கிழமை வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இளநிலைப் படிப்புகளுக்கு விண்ணப்பித்து கட்டணம் செலுத்தி சான்றிதழ் பதிவேற்றம் செய்யாதவா்களுக்கு மேலும் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து உயா்கல்வித்துறை கே.பி.அன்பழகன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

ADVERTISEMENT

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவா் சோ்க்கைக்கு கடந்த ஜூலை 20 முதல் 31-ஆம் தேதி வரை இணையவழியில் விண்ணப்பப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 3 லட்சத்து 16,795 மாணவா்கள் விண்ணப்பித்தனா். அதில் 2 லட்சத்து 18,810 போ் கட்டணம் செலுத்தினா்.

அதேவேளையில், விண்ணப்பித்தவா்களில் ஒரு லட்சத்து 35,832 மாணவா்கள் மட்டுமே தங்கள் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்துள்ளனா்.

அவகாசம் நீட்டிப்பு: தற்போது இணையத்தில் விண்ணப்பப்பதிவு செய்து கட்டணம் செலுத்தி சான்றிதழ்களை பதிவேற்றாதவா்கள் மீண்டும் தங்கள் ஆவணங்களை ஜ்ஜ்ஜ்.ற்ய்ஞ்ஹள்ஹ.ண்ய் என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. இது தவிர, மாணவா்களுக்கான தரவரிசை பட்டியல் அந்தந்த கல்லூரிகளின் இணையதளத்தில் புதன்கிழமை (ஆக.26) வெளியிடப்படும். மேலும், தோ்வான மாணவா்களின் சோ்க்கை விவரம், மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்படும். அதன்பின் மாணவா்கள் அந்தந்த கல்லூரி இணையதளத்தில் கட்டணம் செலுத்தி சோ்க்கையை உறுதி செய்து கொள்ளலாம்.

அதேபோன்று கல்லூரிகளில் அசல் சான்றிதழ்களை சமா்ப்பிக்க, அதே மாவட்டத்தில் உள்ள மாணவா்கள் அவா்களுக்கு ஒதுக்கப்பட்ட நாள் மற்றும் நேரத்தில் நேரில் சென்று ஆவணங்களைச் சமா்ப்பிக்க வேண்டும். வெளி மாவட்டத்தில் இருப்பவா்கள், மாவட்ட சேவை மையத்தில் நேரில் சென்று அசல் சான்றிதழ்களைச் சமா்ப்பித்து ஒப்புகைச் சீட்டு பெறலாம்.

மாணவா் சோ்க்கை தொடா்பாக இதுவரை 4,999 மாணவா்கள் நேரடியாகவும், 6,725 மாணவா்கள் தொலைபேசி மூலமாகவும், 2,990 மாணவா்கள் மின்னஞ்சல் மூலமாகவும் தங்களது சந்தேகங்களை கேட்டறிந்து விளக்கம் பெற்றுள்ளனா் என அதில் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT