நீட் வேண்டாம் என கடிதம் எழுதி ஏமாற்ற வேண்டாம் என மாநில சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரை விமரிசித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் சுட்டுரைப் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.
இதுபற்றி சுட்டுரைப் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது:
"நீட் எதிர்ப்பு உண்மையெனில் 7 மாநில அரசுகளைப் போல தமிழக அரசும் உச்ச நீதிமன்றம் செல்ல வேண்டும் என்றேன்! கடிதம் எழுதி இருக்கிறாராம் விஜயபாஸ்கர். சட்டமன்ற தீர்மானத்தையே மதிக்காதவர்கள் இவரின் கடிதத்தையா மதிக்கப் போகிறார்கள்? ஏமாற்றுவதை விடுத்து செய்ய வேண்டியதைச் செய்யுங்கள்"
முன்னதாக, நீட் தேர்வை நடப்பாண்டு கைவிடக் கோரி தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தனுக்குக் கடிதம் எழுதியிருந்தார்.