தமிழ்நாடு

தேமுதிக மகளிரணி துணைச் செயலாளர் மின்சாரம் தாக்கி பலி

26th Aug 2020 05:42 PM

ADVERTISEMENT

 

நீலகிரியில் தே.மு.தி.க. மகளிரணி துணைச் செயலாளர் மின்சாரம் தாக்கி செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தார்.

நீலகிரி மாவட்டம் கூடலூர் அடுத்துள்ள அமைக்குளம் பகுதியைச் சேர்ந்த விஜயலட்சுமி (47). இவர் வீட்டில் வேலை செய்துகொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் அதே இடத்தில் உயிரிழந்தார். 

தகவலறிந்த அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் தேவாலா காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்தனர். காவல்துறையினர் சடலத்தைக் கைப்பற்றி கூடலூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றன. இவர் தே.மு.தி.க. கட்சியின் நெல்லியாளம் நகர மகளிரணி துணைச் செயலாளராகப் பதவி வகித்து வந்தார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT