புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையில் பாரதிய ஜனதா கட்சியின் சக்தி கேந்திரா பொறுப்பாளர்கள் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு கட்சியின் தேசிய செயலாளர் கெ.எச். ராஜா கலந்துகொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசியவர்..
தேசிய கல்வி கொள்கையினை எதிர்க்கும் அரசியல் கட்சியினர் இந்தி மொழியை எதிர்க்கின்றேன் என்று ஏழை, எளிய மாணவர்களின் எதிர்காலத்தை பாழக்குகின்றனர்.
அவர்களின் பிள்ளைகள், பேரன்கள் மட்டும் இந்தி மொழி கற்கும் பள்ளியில் படிப்பது ஞாயமா அவர்களையும் அரசு பள்ளியில் சேர்க்க வேண்டியது தானே என்றும், வருகின்ற சட்டப்பேரவை தேர்தலில் தமிழகத்தில் யார் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதை பாஜக முடிவு செய்யும் என்றார்.
பாரத பிரதமரின் கிஷான் திட்டத்தில் நடைபெற்ற முறைகேட்டில் ஈடுப்பட்ட அதிகாரிகள் மீது தமிழக அரசு கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்றார். நீட் தேர்வுக்கான பயிற்சியை மாணவர்களுக்கு முறையாக அளிக்க வேண்டும். நீட் தேர்வை எதிர்க்க கூடாது என்றார்.
நிகழ்சியில் மாநில துணைத் தலைவர் புரட்சி கவிதாசன், மாவட்ட தலைவர் ராம சேதுபதி, ஒன்றிய தலைவர் டி. தவமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் .