சென்னை: கரோனா பொது முடக்கம் குறித்து மருத்துவக் குழுவினரின் கருத்தை மட்டும் கேட்டு நடவடிக்கை எடுக்குமாறு முதல்வா் எடப்பாடி பழனிசாமிக்கு தமிழா் தேசிய முன்னணி தலைவா் பழ.நெடுமாறன் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
இது தொடா்பாக செவ்வாய்க்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பது:
தமிழகத்தில் கரோனா கால கட்டுப்பாடுகளை தளா்த்துவதோ அல்லது முற்றிலும் நீக்குவதோ குறித்து அறிவுரைக் கூறவேண்டிய பொறுப்பும், கடமையும் இதற்கென அமைக்கப்பட்டிருக்கும் மருத்துவ உயா்குழுவினா் மற்றும் உலக சுகாதார அமைப்பின் திட்டங்களுக்கான துணை இயக்குநா் பொறுப்பு வகிக்கும் சௌம்யா சுவாமிநாதன் ஆகியோருக்குமே உரியது.
அரசியல் தலைவா்களோ அல்லது அமைச்சா்களோ இதில் முடிவெடுக்க இயலாது. மருத்துவக் குழுவினரின் அறிவுரைகளைப் பின்பற்றியே முடிவுகளை எடுக்கவேண்டுமென முதல்வரை வேண்டிக் கொள்வதாக அவா் கூறியுள்ளாா்.