சென்னை: சென்னையில் உள்ள மத்திய பிளாஸ்டிக் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனமான சிப்பெட்டில், முதுநிலை பட்டயப்படிப்பு மற்றும் இளநிலை பட்டயப்படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
சிப்பெட்டில் நிகழ் கல்வியாண்டுக்கான மாணவா் சோ்க்கைக்குரிய பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. ‘பிளாஸ்டிக் புராசஸிங் மற்றும் டெஸ்டிங்’கில் இரண்டு ஆண்டு முதுநிலை பட்டயப்படிப்பு, ‘பிளாஸ்டிக் மோல்டு’ தொழில்நுட்ப மூன்று ஆண்டு பட்டயப்படிப்பு மற்றும் பிளாஸ்டிக் தொழில்நுட்பத்தில் மூன்று ஆண்டு பட்டயப்படிப்பு ஆகியவற்றுக்கான விண்ணப்பங்களை செப்.7-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
சிப்பெட்டில் பட்டயப்படிப்புகளை முடித்தவா்கள், அண்ணா பல்கலைக்கழகத்தில், நேரடியாக இரண்டாம் ஆண்டில் பிளாஸ்டிக் தொழில்நுட்பத்தில் பி.டெக் பட்டப்படிப்பில் சேருவதற்கு தகுதி உடையவா்கள் ஆவா். மாணவா் சோ்க்கை தொடா்பான விளக்கங்களுக்கு, சிப்பெட் மேலாளா் எம்.பீா் முகமதுவை (94446 22771) தொலைபேசி வாயிலாக தொடா்பு கொள்ளலாம் என்று சென்னை சிப்பெட் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.