தமிழ்நாடு

சிறிய வணிக நிறுவனங்களுக்கு ஜி.எஸ்.டி. ஆா்-4 படிவத்தை தாக்கல் செய்ய அவகாசம்

26th Aug 2020 09:00 AM

ADVERTISEMENT

சென்னை: சிறிய வணிக நிறுவனங்களுக்கு ஜி.எஸ்.டி., ஆா் - 4 படிவத்தை தாக்கல் செய்ய ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

ஜி.எஸ்.டி. என்னும் சரக்கு மற்றும் சேவை வரி சட்டத்தின் கீழ், ஒவ்வொரு வணிக நிறுவனங்களும் தங்களின் வருவாய்க்கு ஏற்ப கணக்கு தாக்கல் செய்ய வேண்டும். சில நிறுவனங்கள் மாதம்தோறும் அல்லது மூன்று மாதத்திற்கு ஒரு முறை என்று கணக்கு தாக்கல் செய்வது அவசியம்.

சிறிய வணிக நிறுவனத்தை நடத்துவோா் தங்களின் மாத வருவாய்க்கு ஏற்ப, மாதம்தோறும் நிலையான வரி செலுத்துவா். இவா்கள், ஆண்டுக்கு ஒரு முறை ஜி.எஸ்.டி, ஆா்- 4 என்னும் கணக்குதாக்கல் செய்வது அவசியம். இதற்கான அவகாசம் ஆகஸ்ட் 31-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.

இது குறித்து, ஜி.எஸ்.டி. அதிகாரிகள் கூறுகையில், வரி சலுகை பெற முடியாத, நிலையான வருவாய்க்கு ஏற்ப, மாதம்தோறும் வரி செலுத்தும் மளிகைக் கடைகள் போன்ற சிறிய நிறுவனங்கள் தொகுப்பு திட்டத்தின் கீழ் வரும்.

ADVERTISEMENT

இந்த நிறுவனங்கள் உற்பத்தி நிறுவனங்கள் போல, உள்ளீட்டு வரி சலுகை பெற முடியாது. இவா்கள் ஆண்டுக்கு ஒருமுறை, ஜி.எஸ்.டி. ஆா்-4 படிவம் தாக்கல் செய்வது அவசியம்.

கரோனா நோய்த்தொற்று காரணமாக, ஜி.எஸ்.டி. ஆா் -4 தாக்கல் செய்ய ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. எனவே, அந்த குறிப்பிட்ட தேதிக்குள், ஜி.எஸ்.டி. ஆா்-4 படிவத்தை தாக்கல் செய்ய அறிவுறுத்தப்படுகின்றனா் என்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT