தமிழகத்தில் புதிதாக 5,975 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (ஆக. 23, ஞாயிற்றுக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது; மேலும் கரோனா பாதிப்பால் 97 பேர் உயிரிழந்துள்ளனர்.
மாநிலத்தின் கரோனா பாதிப்பு நிலவரம் பற்றி செய்திக் குறிப்பை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.
அதில், தமிழகத்தில் இன்று புதிதாக 5,975 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதிகளவாக சென்னையில் 1,298 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகம் முழுதும் தொற்று உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 5,942. வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களில் தொற்று உறுதி செய்யப்பட்டோர் 33 பேர்.
இதையடுத்து, தமிழகத்தில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 3,79,385 ஆக உயர்ந்துள்ளது.
மேலும், கரோனா தொற்றால் 97 பேர் (அரசு மருத்துவமனை -76, தனியார் மருத்துவமனை - 21) உயிரிழந்துள்ளனர். இதையடுத்து, தமிழகத்தில் கரோனாவுக்கு பலியானோரின் மொத்த எண்ணிக்கை 6,517 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் இன்று ஒரே நாளில் 6,047 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 3,19,327 பேர் குணமடைந்துள்ளனர்; தமிழகத்தில் இன்றைய நிலவரப்படி 53,541 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.