தமிழகம் முழுவதும் நேற்று ஒரேநாளில் டாஸ்மாக் கடைகளில் ரூ.250.25 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது.
இதில் அதிகபட்சமாக மதுரை மண்டலத்தில் ரூ.52.45 கோடிக்கு மது விற்பனை ஆகியுள்ளது. அதைத் தொடர்ந்து திருச்சி மண்டலத்தில் ரூ.51.27 கோடிக்கும், சென்னை மண்டலத்தில் ரூ.50.65 கோடிக்கும், சேலம் மண்டலத்தில் ரூ.49.30 கோடிக்கும், கோவை மண்டலத்தில் ரூ.46.58 கோடிக்கும் மது விற்பனையாகியுள்ளது.
கடந்த வாரம் சனிக்கிழமை ரூ. 248 கோடிக்கு மது விற்பனையாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த 18 ஆம் தேதி சென்னையிலும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதால் பொதுமுடக்க காலத்தில் முதல்முறையாக விற்பனை ரூ.250 கோடியைத் தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.