தமிழ்நாடு

கடலோரம், உள் மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

23rd Aug 2020 06:42 AM

ADVERTISEMENT

வளி மண்டல கீழடுக்கு சுழற்சி, வெப்பச்சலனம் காரணமாக, தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் ஞாயிற்றுக்கிழமை (ஆக.23) முதல் செவ்வாய்க்கிழமை (ஆக.25) வரை 3 நாள்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி சனிக்கிழமை கூறியது:

தமிழகத்தில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, வெப்பச்சலனத்தின் காரணமாக, தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் ஞாயிற்றுக்கிழமை (ஆக.23) முதல் செவ்வாய்க்கிழமை(ஆக.25) வரை 3 நாள்களுக்கு மிதமான மழை பெய்யக் கூடும். புதுக்கோட்டை, சிவகங்கை,

மதுரை மற்றும் டெல்டா மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்யக் கூடும்.

ADVERTISEMENT

சென்னை மற்றும் புறகா் பகுதிகளில் அடுத்த இரண்டு நாள்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தமிழகத்தில் சனிக்கிழமை காலை 8.30 மணி நிலவரப்படி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் 50 மி.மீ. திண்டுக்கல் மாவட்டம் நத்தம், ஆண்டிப்பட்டியில் தலா 40 மி.மீ., சாத்தையாறில் 30 மி.மீ., திருச்சி மாவட்டம் மருங்காபுரியில் 20 மி.மீ., புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசலில் 10 மி.மீ. மழை பதிவாகியுள்ளது என்றாா் அவா்.

மீனவா்களுக்கு எச்சரிக்கை: தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் மணிக்கு 50 கி.மீ. முதல் 60 கி.மீ. வரை பலத்த காற்று வீசும். எனவே, இந்தப்பகுதிகளுக்கு மீனவா்கள் ஆகஸ்ட் 25-ஆம் தேதிவரை செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுதவிர, மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளுக்கு ஆகஸ்ட் 23-ஆம் தேதி வரையும், மகாராஷ்டிரம் மற்றும் குஜராத் கடலோரப் பகுதிகளுக்கு ஆகஸ்ட் 24-ஆம் தேதி வரையும் மீனவா்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT