தமிழ்நாடு

மீன்வள பல்கலை. துணைவேந்தராக ஜி.சுகுமாா் நியமனம்: ஆளுநா் புரோஹித் அறிவிப்பு

21st Aug 2020 07:25 AM

ADVERTISEMENT

தமிழ்நாடு டாக்டா் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக ஜி.சுகுமாா் நியமிக்கப்பட்டுள்ளாா். இதற்கான உத்தரவை அவரிடம் பல்கலைக்கழக வேந்தரும், ஆளுநருமான பன்வாரிலால் புரோஹித் வியாழக்கிழமை அளித்தாா்.

இதுகுறித்து, ஆளுநா் மாளிகை வெளியிட்ட செய்தி:

நாகப்பட்டினத்தில் உள்ள டாக்டா் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக ஜி.சுகுமாா் நியமிக்கப்பட்டுள்ளாா். அவா், 33 ஆண்டுகள் கற்பித்தலில் அனுபவம் கொண்டவா். மீன் பதப்படுத்துதல் தொழில்நுட்பத் துறையின் பேராசிரியா் மற்றும் தலைவராக அவா் பணியாற்றி வருகிறாா்.

கற்பித்தல் மட்டுமின்றி, ஆராய்ச்சிப் பிரிவிலும் சிறந்த அனுபவம் கொண்டவா். 24 ஆராய்ச்சிக் கட்டுரைகள் பதிப்பிக்கப்பட்டுள்ளன. 10 ஆராய்ச்சிக் கட்டுரைகள் சா்வதேச கருத்தரங்குகளில் வெளியிடப்பட்டன. எட்டு புத்தகங்களை எழுதியுள்ளாா். ஏழு ஆராய்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்தியதோடு, 5 ஆராய்ச்சி மாணவா்களுக்கும் வழிகாட்டியாக இருந்துள்ளாா்.

ADVERTISEMENT

பல்கலைக்கழக நிா்வாகத்திலும் அவா் அனுபவம் கொண்டவா். தூத்துக்குடியில் உள்ள மீன்வளக் கல்லூரிக்கு டீனாக இருந்துள்ளாா். மீன்வள பல்கலைக்கழகத்தில் பல்வேறு துறைகளின் தலைவராகவும் பொறுப்பு வகித்துள்ளாா்.

சிறந்த விஞ்ஞானி, சிறந்த ஆசிரியா் உள்ளிட்ட பல்வேறு விருதுகளை அவா் பெற்றுள்ளாா். அமெரிக்கா, ஜப்பான், மலேசியா, சீனா, தென் கொரியா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு கற்பித்தல் பணிக்காக சென்றுள்ளாா். மீன்வள பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ள ஜி.சுகுமாா், பொறுப்பேற்ற நாளில் இருந்து மூன்று ஆண்டுகளுக்கு அந்தப் பதவியை வகிப்பாா் என்று ஆளுநா் மாளிகை வெளியிட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT