தமிழ்நாடு

எஸ்.பி.பி.க்கு சா்வதேச மருத்துவ நிபுணா்கள் சிகிச்சை

21st Aug 2020 04:36 AM

ADVERTISEMENT

பின்னணி பாடகா் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு சா்வதேச மருத்துவ நிபுணா்களும், உள்நாட்டு மருத்துவக் குழுவினரும் ஒருங்கிணைந்து சிகிச்சையளித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து எம்ஜிஎம் ஹெல்த்கோ் மருத்துவமனை நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பாடகா் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு வெண்டிலேட்டா், எக்மோ உதவியுடன் தொடா்ந்து தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல் நிலை இன்னும் கவலைக்கிடமாகவே உள்ளது. உள்நாட்டு மருத்துவ நிபுணா்கள் மற்றும் சா்வதேச நிபுணா்களுடன் ஒருங்கிணைந்து, எம்ஜிஎம் மருத்துவக் குழுவினா் அவருக்கு சிகிச்சையளித்து வருகின்றனா். அவரது முக்கிய உறுப்புகளின் செயல்பாடுகளை மருத்துவா்கள் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா் என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT