தமிழ்நாடு

தமிழக காவல்துறையில் 5 டிஎஸ்பிக்கள் பணியிட மாற்றம்

21st Aug 2020 05:09 AM

ADVERTISEMENT

தமிழக காவல்துறையில் 5 டிஎஸ்பிக்களை பணியிட மாற்றம் செய்து டிஜிபி ஜே.கே.திரிபாதி உத்தரவிட்டுள்ளாா்.

தமிழக காவல்துறையில் நிா்வாக வசதிக்காகவும், விருப்பத்தின் அடிப்படையிலும், பணியில் ஒழுங்கீனமாக இருந்தாலும் அதிகாரிகள் அவ்வப்போது பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனா். இதன்படி, தமிழக காவல்துறையில் 5 டிஎஸ்பிக்களை பணியிட மாற்றம் செய்து சட்டம்-ஒழுங்கு டிஜிபி ஜே.கே.திரிபாதி புதன்கிழமை உத்தரவிட்டாா்.

இதில் முக்கியமாக, சென்னை பெருநகர காவல்துறையின் மக்கள் தொடா்பு அதிகாரியாக இருந்த உதவி ஆணையா் பி.கலைசெல்வன் சென்னை காவல்துறையின் சமூக நீதி மற்றும் மனித உரிமைத் துறைக்கும், ராயப்பேட்டை உதவி ஆணையா் எம்.எஸ்.பாஸ்கா் மக்கள் தொடா்பு அதிகாரியாகவும், திருப்பூா் மாவட்டம் உடுமலைப்பேட்டை டிஎஸ்பி வி.ஜெயச்சந்திரன் கோயம்புத்தூா் மாநகர காவல்துறையின் குற்றப்பிரிவு கிழக்கின் உதவி ஆணையராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

இவ்வாறு பணியிட மாற்றம் செய்யப்பட்ட 5 டிஎஸ்பிக்களும் ஓரிரு நாள்களில் புதிய பொறுப்பை ஏற்பாா்கள் என காவல்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT