தமிழ்நாடு

ரஷியாவில் இறந்த தமிழக மருத்துவ மாணவர்கள் உடல் சென்னை வந்தடைந்தது

21st Aug 2020 05:27 PM

ADVERTISEMENT

ரஷியாவில் இறந்த தமிழக மருத்துவ மாணவர்கள் உடல் இன்று சென்னை வந்தடைந்தது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சொக்கநாதபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் முகமது ரபிக். யுனானி மருத்துவரான இவரது மகன் முஹம்மது ஆஷிக் (22), ரஷியாவிலுள்ள வோலோகிரேட் ஸ்டேட் மெடிக்கல் பல்கலைக்கழகத்தில் 5 ஆம் ஆண்டு மருத்துவப் படிப்பு படித்து வந்தார்.

இந்த நிலையில், முஹம்மது ஆஷிக் தனது சக மாணவர்களான சென்னையைச் சேர்ந்த ஸ்டீபன், ராமு விக்னேஷ், மனோஜ் ஆனந்த் ஆகியோருடன் அங்குள்ள வால்கா நதியில் குளிப்பதற்காக கடந்த 8ஆம் தேதி சென்றார். அங்கு குளித்துக் கொண்டிருந்த முஹம்மது ஆஷிக் உள்பட 4 பேரும் எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

மருத்துவம் படிக்கச் சென்ற முஹம்மது ஆஷிக் நீரில் மூழ்கி உயிரிழந்தது அவரது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து இறந்த மாணவர்களின் சடலத்தை தமிழகம் கொண்டுவர அரசு உதவி செய்ய வேண்டும் என்று அவர்களது குடும்பத்தினா் கோரிக்கை வைத்திருந்தனர்.

ADVERTISEMENT

இந்த நிலையில் ரஷியாவில் இறந்த தமிழக மருத்துவ மாணவர்கள் உடல் இன்று சென்னை வந்தடைந்தது. 12 நாட்களுக்குப் பிறகு ரஷியாவில் இருந்து உடல்கள் விமானம் மூலம் சென்னை கொண்டு வரப்பட்டது.

Tags : tamilnadu
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT