தமிழ்நாடு

தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் விநாயகர் சதுர்த்தி வாழ்த்து

21st Aug 2020 03:57 PM

ADVERTISEMENT

நாளை விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படவுள்ள நிலையில் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் நாட்டு மக்களுக்கு வாழ்த்து கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துளள வாழ்த்துச் செய்தியில், விநாயகர் வினைகளைத் தீர்ப்பவர் வெற்றிகளைத் தருபவர் .விநாயகர் எளிமையான கடவுள், எளியவர்களின்  வேண்டுதலுக்கு செவி சாய்க்கக்கூடிய இறைவன்.
இந்த விநாயகர் சதுர்த்தி பொதுமக்களுக்கு பாதுகாப்பை தருவதாகவும் அதே சமயம் மகிழ்ச்சி அளிக்க கூடியதாகவும் வருங்கால முன்னேற்றத்திற்கு வித்திடுவதாகவும் அமையட்டும். 
விநாயகர் அருளால் கரோனா எனும் சவாலான சூழ்நிலையை எதிர்க்கும் மன உறுதி கொண்டு இந்த விநாயகர் சதுர்த்தியை மகிழ்ச்சியோடு கொண்டாடுவோம். பாதுகாப்பான உடல்நிலையும், சுய சார்பான நாட்டின் நிலையையும் அடைந்து நாட்டிலும், வீட்டிலும் மகிழ்ச்சிபொங்க இந்த விநாயகர் சதுர்த்தி வழிவகுக்கட்டும்.அனைவருக்கும் எனது  இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags : Vinayaka Chaturthi
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT