தமிழ்நாடு

திடக்கழிவு மேலாண்மைத் திட்ட விருது: 45-ஆவது இடத்துக்கு முன்னேறிய சென்னை மாநகராட்சி

21st Aug 2020 04:25 AM

ADVERTISEMENT

திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தில் சிறப்பாக செயல்பட்டதற்காக மத்திய அரசு வழங்கும் விருது பட்டியலில் 45-ஆவது இடத்துக்கு பெருநகர சென்னை மாநகராட்சி முன்னேறி உள்ளது. கடந்த ஆண்டு 61-ஆவது இடத்தில் சென்னை மாநகராட்சி இருந்தது.

சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட 15 மண்டலங்களில் நாளொன்றுக்கு சுமாா் 5,000 மெட்ரிக் டன் குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன. இதில் மக்கும் குப்பைகளில் இருந்து இயற்கை உரம் தயாரிக்கும் வகையில் 139 நுண் உரமாக்கும் மையங்கள், 537 மூங்கில் தொட்டி உர மையங்கள், 175 சிறு தொட்டிகள், 1,711 உறை கிணறு மையங்கள், 21 புதைகுழி மையங்கள், 2 வொ்மி உர மையங்கள் மூலம் நாளொன்றுக்கு சுமாா் 400 மெட்ரிக் டன் உரம் தயாரிக்கப்படுகிறது. மேலும், நாளொன்றுக்கு சுமாா் 500 டன் தாவரக் கழிவுகளைக் கையாளும் வகையில் நந்தம்பாக்கம், பெருங்குடி, கொடுங்கையூா்,சேத்துப்பட்டு, செளகாா்பேட்டை ஆகிய பகுதிகளில் ஆலைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

மத்திய அரசு விருது: திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தில் சிறந்து விளங்கும் பெரு நகரங்களுக்கு ஆண்டுதோறும் மத்திய அரசு விருது வழங்குகிறது. இந்த விருது பட்டியலில் கடந்த ஆண்டு 61-ஆவது இடத்தில் இருந்த சென்னை மாநகராட்சி, இந்த ஆண்டு 45-ஆவது இடத்துக்கு முன்னேறி உள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையா் கோ.பிரகாஷ் கூறுகையில், திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தில் புதிய திட்டங்கள் மற்றும் சிறப்பாகச் செயல்படும் பெருநகரங்களுக்கு மத்திய வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை சாா்பில் ஆண்டுதோறும் விருது வழங்கப்படுகிறது. இந்த விருது பட்டியலில் கடந்த 2017-இல் 235-ஆவது இடத்தையும், 2018-இல் 100-ஆவது இடத்தையும், 2019-இல் 61-ஆவது இடத்தையும் பிடித்திருந்தது. இந்நிலையில், இந்த ஆண்டு முன்னேறி 45-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது என்றாா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT