தமிழ்நாடு

மூத்த தலைவர் ஆர். நல்லகண்ணுக்கு கரோனா தொற்று இல்லை: அமைச்சர் விஜயபாஸ்கர்

21st Aug 2020 02:11 PM

ADVERTISEMENT

 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணுக்கு கரோனா தொற்று இல்லை என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சென்னையில் வசித்து வரும் நல்லகண்ணுவுக்கு வியாழக்கிழமை இரவு லேசான காய்ச்சல் ஏற்பட்டுள்ளதை அடுத்து, சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். இதையடுத்து இன்று காலை அவருக்கு கரோனா பரிசோதனைக்கான மாதிரிகள் எடுக்கப்பட்டது. அதில் தொற்று இல்லை என்று உறுதியாகியுள்ளது. 

ADVERTISEMENT

இதுகுறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது, 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுக்கு கரோனா தொற்று இல்லை. காய்ச்சல் காரணமாகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் மேலும் ஐந்து நாள்களுக்குள் சிகிச்சை பெற்று வீடு திரும்புவார் என்று அவர் கூறியுள்ளார். 
 

Tags : nallakannu
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT