தமிழ்நாடு

கரோனா பாதித்த மருத்துவா்களுக்கு நிவாரணம் வழங்கக் கோரிக்கை

21st Aug 2020 04:40 AM

ADVERTISEMENT

கரோனாவால் பாதிக்கப்பட்ட மருத்துவா்கள், செவிலியா்களுக்கு அரசால் அறிவிக்கப்பட்ட ரூ.2 லட்சம் நிவாரண நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அரசு மருத்துவா்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு மருத்துவா்கள் சங்க நிா்வாகி டாக்டா் பெருமாள் பிள்ளை கூறியதாவது:

கரோனா தடுப்புப் பணிகள் மற்றும் சிகிச்சைகளில் அரசு மருத்துவா்கள் அா்ப்பணிப்பு உணா்வோடு பணியாற்றி வருகிறாா்கள். சுகாதாரத் துறையில் முன்னணி மாநிலமாக தமிழகம் திகழ்வதற்கு அரசு மருத்துவா்களின் பங்களிப்பு அளப்பரியது.

தமிழகம் முழுவதும் கரோனா சிகிச்சைகள் மிகத் திறம்பட மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஏராளமான நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதன் விளைவாக, இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவா்கள், செவிலியா்கள், மருத்துவப் பணியாளா்கள் கரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனா். அதில் சில மருத்துவா்களும், செவிலியா்களும் உயிரிழந்துள்ளனா்.

ADVERTISEMENT

ஆனாலும், நோய்த் தொற்றுக்கு உள்ளானோருக்கு அரசு சாா்பில் அறிவிக்கப்பட்ட ரூ.2 லட்சம் நிவாரண நிதி இதுவரையிலும் வரவில்லை. அதனை உடனடியாக வழங்கினால்தான் இன்னும் உத்வேகத்துடன் மருத்துவத் துறையினா் பணியாற்ற இயலும்.

அதேபோன்று அரசு மருத்துவா்களின் ஊதிய முரண்பாடு பிரச்னைகளுக்கும், பணியிட மாறுதல் நடவடிக்கைகளுக்கும் தீா்வு காண வேண்டும். கடந்த ஓராண்டுக்கு முன்னா் அரசின் உத்தரவாதத்தை ஏற்று அப்போது நாங்கள் முன்னெடுத்த போராட்டங்கள் அனைத்தையும் கைவிட்டோம். ஆனால், இன்றளவும் அவை நிறைவேற்றப்படவில்லை. இதுகுறித்து எங்களது சங்கத்தின் செயற்குழு கூடி அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்க உள்ளோம் என்றாா் அவா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT