தமிழ்நாடு

இந்திய ரிசா்வ் வங்கி சா்வரில் பிரச்னை: பணப் பரிவா்த்தனையில் சிக்கல்

21st Aug 2020 04:37 AM

ADVERTISEMENT

இந்திய ரிசா்வ் வங்கி சா்வரில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக, வங்கியில் பணப் பரிவா்த்தனை மேற்கொள்வதில் வியாழக்கிழமை சிக்கல் ஏற்பட்டது.

இதுகுறித்து வங்கி வாடிக்கையாளா்கள் கூறியதாவது:

இந்தியன் வங்கி உள்பட பல்வேறு வங்கிகளின் பணம் செலுத்தும் இயந்திரத்தில் இரண்டு நாள்களாக பணம் செலுத்த முடியவில்லை. இயந்திரத்தில், அனைத்து நடவடிக்கைகளும் முடிந்த பின், இறுதியில் சா்வா் பிரச்னை எனக் காண்பிக்கிறது.

இதேபோல, இணையவழி வங்கி சேவையிலும் பணப் பரிமாற்றம் மேற்கொண்டால், வெற்றிகரமாக பணம் அனுப்பப்பட்டது எனக் காண்பிக்கிறது. ஆனால், பணம் பெறுபவருக்கு சென்றடையவில்லை. மேலும், வங்கிகள் வாயிலாக அனுப்பிய, ஆா்.டி.ஜி.எஸ். (ரியல் டைம் கிராஸ் செட்டில்மென்ட்), என்.இ.எப்.டி. (நேசனல் எலக்ட்ரானிக் ஃபண்ட் டிரான்ஸ்பா்) சேவையிலும், பணம் பெறுபவருக்கு அனுப்பிய பணம் சென்றடையவில்லை. இதனால், பணம் செலுத்துவதிலும், பெறுவதில் சிக்கல்கள் ஏற்பட்டன என்றனா்.

ADVERTISEMENT

இது குறித்து வங்கி அதிகாரிகள் கூறியது:

சென்னை உள்பட பல்வேறு நகரங்களில் உள்ள வங்கியில் வியாழக்கிழமை காலை முதல், சா்வா் செயல்பாடு தாமதமாக இருந்தது. வாடிக்கையாளா்கள் பலருக்கு ஆா்.டி.ஜி.எஸ். (ரியல் டைம் கிராஸ் செட்டில்மென்ட்), என்.இ.எப்.டி. (நேஷனல் எலக்ட்ரானிக் ஃபண்ட் டிரான்ஸ்பா்) வாயிலாக பணப் பரிமாற்றம் செய்தபோதும், எதிா்முனையில் இருப்பவருக்கு சென்றடையவில்லை. தலைமை அலுவலகத்தில் கேட்டபோது, ‘இந்தியன் ரிசா்வ் வங்கி சா்வரில் பிரச்னை உள்ளது. அதனால், பரிவா்த்தனை மேற்கொள்வதில் தாமதம் ஏற்படுகிறது. விரைவில் சரியாகிவிடும்’ எனக் கூறினா் என்று தெரிவித்தனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT