தமிழ்நாடு

விமான நிலையங்கள் தனியார்மயமாக்கம்: ஸ்டாலின் கண்டனம்

21st Aug 2020 04:47 PM

ADVERTISEMENT

 

சென்னை: நாடுமுழுவதும் விமான நிலையங்கள் தனியார்மயமாக்கம் செய்யும் மத்திய அரசின் செயலுக்கு, திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக வெள்ளியன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘விமான நிலையங்களை தனியார்மயமாக்கும் மத்திய அரசின் ஒருதலைபட்சமான முடிவானது, மாநில அரசிடமிருந்து அதன் உரிமையையும் தன்னாட்சியையும் பறிப்பதாகும்.

இது, விமான நிலையங்களை தனியார்மயமாக்கும் எந்தவொரு முடிவும் மாநில அரசுடன் கலந்தாலோசிக்கப்பட்டே எடுக்கப்படும் என்ற 2003-ம் ஆண்டு வழங்கப்பட்ட உறுதியை மீறுவதாகும்; இம்முடிவைத் திரும்பப் பெற வேண்டும்’ என்று பதிவிட்டுள்ளார்.     

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT