தமிழ்நாடு

காலாண்டுத் தேர்வு எப்போது? - அமைச்சர் செங்கோட்டையன் பதில்

21st Aug 2020 01:14 PM

ADVERTISEMENT

தமிழகத்தில் கரோனா பாதிப்பு குறைந்தவுடன் காலாண்டுத் தேர்வு நடத்துவது பற்றி முடிவு எடுக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 

ஈரோடு நம்பியூரில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது: 

கடந்த ஆண்டு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமின்றி 8, 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் மறுதேர்வு எழுத வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

காலத்தின் தேவைக்கேற்ப பாடங்களை குறைப்பது பற்றி முதல்வர் முடிவெடுப்பார். அரசு பள்ளிகளில் இதுவரை 50 ஆயிரம் மாணவர்கள் கூடுதலாக சேர்ந்துள்ளனர். தமிழக அரசு இருமொழிக் கொள்கையில் உறுதியாக உள்ளது. 

ADVERTISEMENT

தமிழகத்தில் கரோனா பாதிப்பு குறைந்தவுடன் மாணவர்களுக்கு நடப்பு ஆண்டின் காலாண்டுத் தேர்வு நடத்துவது பற்றி முடிவு எடுக்கப்படும். 

அரசுப்பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை மற்றும் பள்ளி மாற்றுச்சான்றிதழை வழங்க பணம் வசூலிக்ககிக் கூடாது. அரசுப்பள்ளி மாணவர்களிடம் எதற்காக பணம் வசூலித்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். 

Tags : school
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT