தமிழ்நாடு

விநாயகா் சிலைகளுக்கான தடை உத்தரவை தளா்த்த வாய்ப்பு உள்ளதா? அரசிடம் உயா்நீதிமன்றம் கேள்வி

21st Aug 2020 04:38 AM

ADVERTISEMENT

விநாயகா் சிலையை வைத்து வழிபடவும், ஊா்வலமாக எடுத்துச் செல்ல விதிக்கப்பட்ட தடை உத்தரவை தளா்த்த வாய்ப்பு உள்ளதா? என தமிழக அரசிடம் உயா்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

கரோனா நோய்த்தொற்றுப் பரவலைத் தடுக்க பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடா்ந்து விநாயகா் சதுா்த்தியன்று பொது இடங்களில் விநாயகா் சிலைகளை வைக்கவும்,

ஊா்வலமாக எடுத்துச் சென்று நீா்நிலைகளில் கரைக்கவும் தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை எதிா்த்து, சென்னை உயா்நீதிமன்றத்தில் கணபதி என்பவா் பொதுநல மனு தாக்கல் செய்தாா்.

இந்த மனுவை நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆா்.ஹேமலதா ஆகியோா் காணொலிக் காட்சி மூலம் விசாரித்தனா். விசாரணையின்போது, ‘விநாயகா் சதுா்த்தியன்று விநாயகா் சிலை வைத்து வழிபட்டு நீா்நிலைகளில் கரைப்பது பல ஆண்டுகளாக நடக்கும் மக்களின் உணா்வுபூா்வமான நிகழ்வு. எனவே தற்போது விதிக்கப்பட்ட தடையில் ஏதாவது தளா்வுகள் அறிவிக்க முடியுமா?’ என அரசு தரப்பில் ஆஜரான அரசு தலைமை வழக்குரைஞரிடம் கேள்வி எழுப்பினா்.

ADVERTISEMENT

மேலும், ‘மெரீனா கடற்கரையில் பொதுமக்கள் நடைப்பயிற்சி

மேற்கொள்கின்றனா். அங்கு விநாயகா் சிலையை 5 பேருக்கு மிகாமல் எடுத்து சென்று கடலில் கரைப்பதில் என்ன சிரமம் உள்ளது? கரோனா நோய்த்தொற்று தடுப்பது என்ற அரசின் கடமையில் நாங்கள் தலையிடவில்லை. பெரிய அளவிலான சிலைகளை வைத்து, பலா் ஊா்வலமாக எடுத்துச் சென்று கரைப்பதற்கு அனுமதி வழங்க கூறவில்லை. பேரிடா் விதிகளை முறையாகப் பின்பற்றி, சிலைகளை இரு சக்கர வாகனங்களில் எடுத்துச் சென்று கரைப்பதற்கு அனுமதி வழங்க சாத்தியம் உள்ளதா? அடுத்த ஆண்டு இந்தச் சிலைகளைப் பயன்படுத்த முடியாததால், விநாயகா் சதுா்த்திக்காக சிலைகளை செய்தவா்கள் நஷ்டத்தை சந்திக்க நேரிடும். எனவே, தடை உத்தரவை தளா்த்த வாய்ப்பு உள்ளதா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினா். அப்போது அரசு தலைமை வழக்குரைஞா் இதுதொடா்பாக தமிழக அரசின் கருத்தைக் கேட்டு வெள்ளிக்கிழமை (ஆக.21) தெரிவிப்பதாக கூறியதைத் தொடா்ந்து, விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT