தமிழ்நாடு

சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 352 உயர்வு!

21st Aug 2020 10:44 AM

ADVERTISEMENT

சென்னையில்  ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 352 உயர்ந்து ரூ. 40,672 -க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

கடந்த சில நாள்களாக தங்கத்தின் விலை குறைந்துவந்த நிலையில் இன்று விலை சற்று அதிகரித்துள்ளது. வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.352 உயர்ந்து ரூ.40,672-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.44 உயர்ந்து, ரூ.5,084-க்கு விற்பனையாகிறது. 

ஜூலை 22-ஆம் தேதி ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.38 ஆயிரமாக இருந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் 7-ஆம் தேதி ரூ.43 ஆயிரத்தையும் தாண்டி, வரலாறு காணாத வகையில் புதிய உச்சத்தைத் தொட்டது குறிப்பிடத்தக்கது. 

மேலும், இன்றைய நிலவரப்படி, வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1.760 காசுகள் உயர்ந்து ரூ.74.30 க்கும், கட்டி வெள்ளி கிலோ ரூ. 74,300 -க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

ADVERTISEMENT

Tags : gold rate
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT