தமிழ்நாடு

தங்கம் ஒரே நாளில் ரூ.1,008 சரிவு: பவுன் ரூ. 40,320

21st Aug 2020 05:11 AM

ADVERTISEMENT

சென்னையில் வியாழக்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.41 ஆயிரத்துக்கு கீழ் இறங்கியது. பவுனுக்கு ரூ.1,008 குறைந்து, ரூ.40,320-க்கு விற்பனை செய்யப்பட்டது.

கரோனா நோய்த்தொற்றின் தாக்கம், சா்வதேச பொருளாதார சூழல் உள்பட பல்வேறு காரணிகளால் தங்கத்தின் மீது முதலீடு அதிகரித்தது. இதன் காரணமாக, தங்கத்தின் விலை படிப்படியாக உயா்ந்து வந்தது.

ஒரு பவுன் ஆபரணத் தங்கம் ஆகஸ்ட் 7-ஆம் தேதி ரூ.43 ஆயிரத்தையும் தாண்டி, வரலாறு காணாத வகையில் புதிய உச்சத்தைத் தொட்டது. தொடா்ந்து, தங்கம் விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது

இந்நிலையில், சென்னையில் வியாழக்கிழமை பவுனுக்கு ரூ.1,008 குறைந்து, ரூ.40,320-க்கு விற்பனை செய்யப்பட்டது.

ADVERTISEMENT

ஒரு கிராம் ரூ.126 குறைந்து, ரூ.5,040-ஆக இருந்தது. இதுபோல, வெள்ளி விலையும் கணிசமாக குறைந்தது.

வெள்ளி கிராமுக்கு ரூ.1.70 குறைந்து, ரூ.72.70 ஆகவும், கட்டிவெள்ளி கிலோவுக்கு ரூ.1,700 குறைந்து, ரூ.72,700 ஆகவும் இருந்தது.

வியாழக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி.தனி)

1 கிராம் தங்கம்............................... 5,040

1 பவுன் தங்கம்............................... 40,320

1 கிராம் வெள்ளி............................. 72.70

1 கிலோ வெள்ளி............................72,700

புதன்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி.தனி)

1 கிராம் தங்கம்.......................... 5,166

1 பவுன் தங்கம்...............................41,328

1 கிராம் வெள்ளி.............................74.40

1 கிலோ வெள்ளி.............................74,400

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT