தமிழ்நாடு

விநாயகர் சதுர்த்தி வழிபாடு: இந்து முன்னணி வேண்டுகோள்

21st Aug 2020 07:38 PM

ADVERTISEMENT

 

சென்னை: விநாயகர் சதுர்த்தி வழிபாடு தொடர்பாக இந்து முன்னணி அமைப்பு வேண்டுகோள் ஒன்றினை முன்வைத்துள்ளது.

நாளை விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்ட உள்ள நிலையில் போது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்ட நிலையில், அவரவர் வீடுகளில் வைத்து வழிபடலாம் என்று தெரிவித்திருந்தது.

இந்நிலையில் விநாயகர் சதுர்த்தி வழிபாடு தொடர்பாக இந்து முன்னணி அமைப்பு வேண்டுகோள் ஒன்றினை முன்வைத்துள்ளது.

ADVERTISEMENT

இந்து முன்னணி அமைப்பு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘விநாயகர் சதுர்த்தியன்று வீடு, கோயில், தனியார் இடத்தில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடுவோம் என்றும், விநாயகர் சிலைகளை வழிபட்டபின் அவரவர் ஏற்பாடுகளில் கூட்டமாக சேராமல் மாலையில் நீர்நிலைகளில் கரைத்து அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்’ என்றும்  வேண்டுகோள் விடுத்துள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT