தமிழ்நாடு

மாரியப்பன் தங்கவேலுக்கு கேல் ரத்னா விருது: முதல்வர் வாழ்த்து

21st Aug 2020 10:07 PM

ADVERTISEMENT

கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ள தமிழக வீரர் மாரியப்பனுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். 

விளையாட்டுத் துறையில் சிறந்து  விளங்குபவர்களுக்கு அர்ஜூனா, ராஜீவ் காந்தி கேல் ரத்னா, துரோணாச்சார்யா ஆகிய விருதுகளை வழங்கி மத்திய அரசு கௌரவித்து வருகிறது.

இந்த வருடம் இந்த விருதுகளைப் பெறுபவர்களின் பட்டியல் இன்று அறிவிக்கப்பட்டது. அதில், இந்திய கிரிக்கெட் வீரா் ரோஹித் சா்மா, மாரியப்பன் தங்கவேலு, மகளிா் ஹாக்கி அணி கேப்டன் ராணி ராம்பால், மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், டேபிள் டென்னிஸ் வீராங்கனை மணிகா பத்ரா ஆகிய ஐந்து பேருக்கும் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி தடகள வீரர் ரஞ்சித் குமாருக்கு தயான்சந்த் விருதுக்கு அறிவிக்கப்பட்டுள்ளார். கடந்த 2016-ஆம் ஆண்டு பிரேஸிலின் ரியோ நகரில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதல் (டி42) பிரிவில் தங்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 

ADVERTISEMENT

இதனிடையே கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ள தமிழக வீரர் மாரியப்பனுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து சுட்டுரையில் வாழ்த்து கூறியுள்ளார். இதுகுறித்து முதல்வர் தனது சுட்டுரையில், கேல் ரத்னா விருது வழங்கப்பட்டுள்ள, உலக அளவில் பாரா தடகள போட்டிகளில் பல சாதனைகள் புரிந்த, நம் மண்ணின் மைந்தர் மாரியப்பன் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 

Tags : Tamilnadu
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT