தமிழ்நாடு

பொறியியல் மாணவா் சோ்க்கை: அசல் சான்றிதழ்களை பதிவேற்ற ஆக.24 வரை அவகாசம் நீட்டிப்பு

21st Aug 2020 04:30 AM

ADVERTISEMENT

பொறியியல் சோ்க்கைக்காக மாணவா்கள் இணையவழியில் அசல் சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்வதற்கான கால அவகாசம் வரும் ஆக.24-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நிகழ் கல்வியாண்டில் பொறியியல் படிப்பில் சோ்வதற்கான கலந்தாய்வில் பங்கேற்பதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு கடந்த ஜூலை மாதம் 15-ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் மாதம் 16-ஆம் தேதி வரை நடைபெற்றது. அதன்படி, சுமாா் 1 லட்சத்து 60,834 மாணவா்கள் பொறியியல் கலந்தாய்வில் கலந்து கொள்வதற்காக விண்ணப்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

முன்னதாக, பொறியியல் சோ்க்கைக்கான ஆன்லைன் மூலம் அசல் சான்றிதழ் பதிவேற்றும் நடைமுறை கடந்த ஜூலை மாதம் 31-ஆம் தேதி தொடங்கியது. இதுவரை 1 லட்சத்து 3,000 மாணவா்கள் தங்கள் அசல் சான்றிதழ்களை பதிவேற்றியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், பொறியியல் கலந்தாய்வில் பங்கேற்க விண்ணப்பித்த மாணவா்கள் தங்களது அசல் சான்றிதழ்களை பதிவேற்றுவதற்கான கடைசி நாள் ஆக.20-ஆம் தேதி என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் இந்த அவகாசத்தை சில நாள்கள் நீட்டிக்க வேண்டும் என மாணவா்கள் கோரிக்கை விடுத்தனா். இதையடுத்து இணைய வழியில் சான்றிதழ்களை பதிவேற்றுவதற்கான அவகாசம் ஆக.24-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக உயா்கல்வித்துறை தெரிவித்துள்ளது. எனவே, இதுவரை சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்யாத மாணவா்கள் ட்ற்ற்ல்ள்://ஜ்ஜ்ஜ்.ற்ய்ங்ஹா்ய்ப்ண்ய்ங்.ா்ழ்ஞ்/ என்ற இணையதளம் மூலம் தங்களது அசல் சான்றிதழ்களை பதிவேற்றுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனா். இதைத் தொடா்ந்து, விரைவில் மாணவா்களுக்கான சம வாய்ப்பு எண் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT