தமிழ்நாடு

சென்னையில் 1,282; பிறமாவட்டங்களில் 4,713 பேர்: மாவட்டவாரியாக கரோனா பாதிப்பு விவரம்

21st Aug 2020 06:24 PM

ADVERTISEMENT

சென்னை தவிர்த்து தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இன்று 4,713 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி ஆகியுள்ளது.

தமிழகத்தில் இன்றைய கரோனா பாதிப்பு குறித்த விவரங்களை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. இதன்படி, தமிழகத்தில் புதிதாக 5,995 பேருக்கு கரோனா தொற்று உறுதி ஆகியுள்ளது. இதனால் தமிழகத்தில் மொத்த பாதிப்பு 3,67,430 ஆக உயர்ந்துள்ளது. 

இதில், அதிகபட்சமாக சென்னையில் இன்று 1,282 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு 1,22,757 ஆக அதிகரித்துள்ளது. சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் இன்று 4,713 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 

இன்றைய பாதிப்பில், சென்னைக்கு அடுத்தபடியாக, செங்கல்பட்டு  மாவட்டத்தில் 430 பேருக்கும், கோவை மாவட்டத்தில் 395 பேருக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் 369 பேருக்கும்தொற்று உறுதி ஆகியுள்ளது. 

ADVERTISEMENT

மாவட்டவாரியாக பாதிப்பு விவரம்: இங்கே க்ளிக் செய்யவும்..

Tags : coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT