தமிழ்நாடு

புதுவையில் புதிதாக 313 பேருக்கு கரோனா தொற்று: மேலும் 6 பேர் பலி

21st Aug 2020 12:56 PM

ADVERTISEMENT

 

புதுவையில் புதிதாக 313 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதுகுறித்து புதுவை சுகாதாரத்துறை வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள தகவல்:
புதுவை மாநிலத்தில் வெள்ளிக்கிழமை 1,229 பேரை பரிசோதித்ததில் புதுச்சேரியில் 299 பேர், காரைக்காலில் 8 பேர், ஏனாமில் 5 பேர், மாஹேவில் ஒருவர் என 313 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் புதுவை மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 9,594 ஆக உயர்ந்துள்ளது.

இதில் புதுவையில் 1,964 பேர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 1,553 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாநிலத்தில் தற்போது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் உள்பட மொத்தமாக 3,517 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

ADVERTISEMENT

இந்நிலையில் கரோனாவால் பாதிக்கப்பட்ட புதுச்சேரி வில்லியனூர் எஸ்எம்வி புரத்தைச் சேர்ந்த 62 வயது முதியவர், முத்தியால்பேட்டை புனித ரோசனா தெருவைச் சேர்ந்த 88 வயது மூதாட்டி, வெங்கட்டா நகர் குமரகுருப்பள்ளம் அந்தோணி கோயில் தெருவைச் சேர்ந்த 61 வயது முதியவர், முத்தியால்பேட்டை வெள்ளாளர் தெருவைச் சேர்ந்த 57 வயது பெண், தட்டாஞ்சாவடி மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த 48 வயது ஆண், காரைக்கால் பிகே சாலையைச் சேர்ந்த 81 வயது முதியவர் என 6 பேர் இந்திராகாந்தி அரசு மருத்துவமனை, ஜிப்மர், காரைக்கால் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தனர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 143 ஆக உயர்ந்துள்ளது. இறப்பு விகிதம் 1.49 சதவீதமாக உள்ளது.

இதனிடையே புதுச்சேரியில் 282 பேர், காரைக்காலில் 16 பேர், ஏனாமில் 2 பேர் என மொத்தம் 300 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதால், வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 5,934 (61.85 சதவீதம்) ஆக அதிகரித்துள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags : coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT