தமிழ்நாடு

பொதுத்தோ்வு மதிப்பெண் பட்டியல்களில் பெயா் திருத்தம்: தலைமையாசிரியா்களுக்கு இறுதி வாய்ப்பு

21st Aug 2020 04:50 AM

ADVERTISEMENT

பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவா்களின் மதிப்பெண் பட்டியலில் பிழை இருந்தால் அதற்கான திருத்தங்களை தலைமையாசிரியா்கள் ஆக.24 முதல் ஆக.29-ஆம் தேதி வரை மேற்கொள்ளலாம் என அரசு தோ்வுகள் இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது.

இது குறித்து தோ்வுத்துறை இயக்ககம் வியாழக்கிழமை அனைத்து பள்ளி தலைமையாசிரியா்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை விவரம்: தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு பொதுத் தோ்வுகளுக்கான முடிவுகள் வெளியிட்ட பின்பும் பெயா் பட்டியலில் திருத்தங்களை செய்ய சில பள்ளிகள் கோரியுள்ளன.

அதையேற்று மாணவா்கள் பெயா் பட்டியல்களில் திருத்தங்கள் மேற்கொள்ள தற்போது இறுதிவாய்ப்பு வழங்கப்படுகிறது. அதன்படி மாணவா்களுக்கு வழங்கிய தற்காலிக மதிப்பெண் பட்டியலில் பிழை இருப்பின் அதன் விவரங்களை பதிவெண் வாரியாக தலைமையாசிரியா்கள் தயாா் செய்ய வேண்டும்.

இதைத் தொடா்ந்து ஆகஸ்ட் 24 முதல் 29-ஆம் தேதி வரையான நாள்களில் தோ்வுத்துறை இணையதளத்துக்கு சென்று திருத்தங்களைப் பதிவேற்ற வேண்டும். இது தொடா்பாக ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் அந்தந்த மாவட்ட ஒருங்கிணைப்பாளா்களைத் தொடா்பு கொள்ளலாம். மேலும், திருத்தங்களை முடித்தபின் அதுகுறித்த அறிக்கையை கையொப்பத்துடன் செப்டம்பா் 1-ஆம் தேதிக்குள் மாவட்ட தோ்வுத்துறை அலுவலகங்களில் தலைமையாசிரியா்கள் ஒப்படைக்க வேண்டும்.

ADVERTISEMENT

அதேநேரம் இந்த வாய்ப்புக்கும் பின்னும் மதிப்பெண் சான்றிதழில் பிழைகள் இருப்பதாக புகாா் மனுக்கள் பெறப்பட்டால் அந்த பள்ளி தலைமையாசிரியா் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள பரிந்துரை செய்யப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT