தமிழ்நாடு

தருமபுரியில் 13,999 பேருக்கு நலத்திட்ட உதவிகள்: முதல்வர் வழங்கினார்

20th Aug 2020 05:30 PM

ADVERTISEMENT


தருமபுரி: தருமபுரியில் வியாழக்கிழமை நடைபெற்ற விழாவில் 13,999 பேருக்கு நலத்திட்ட உதவிகளை தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி வழங்கினார்.

தருமபுரி மாவட்டத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, மாவட்ட வளர்ச்சி திட்டப் பணிகள் மற்றும் கரோனா தடுப்பு பணிகள் மற்றும் விவசாயிகள், சிறு, குறு, நடுத்தர தொழில் கூட்டமைப்பினர், மகளிர் சுய உதவிக் குழுவினருடன் கலந்தாலோசனைக் கூட்டம் ஆகிய நிகழ்வுகளில் பங்கேற்க முதல்வர் பழனிசாமி தருமபுரிக்கு வியாழக்கிழமை பிற்பகல் வருகை புரிந்தார்.

இதில் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 13,999 பேருக்கு, சூரிய சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் திட்டம், பாரம்பரிய விவசாயம், ஒருங்கிணைந்த தோட்டக்கலை வளர்ச்சி இயக்கம், பயிர்க்கடன் வழங்கும் திட்டம், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் உதவி, புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம், படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்பில் ரூ. 85 கோடியே 17 லட்சத்து 84 ஆயிரம் மதிப்பிலான அரசின் நலத்திட்ட உதவிகளையும் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வழங்கினார்.

இதையடுத்து, ஊரக வளர்ச்சித் துறை, பொது சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை, இந்து சமய அறநிலையத் துறை மற்றும் பள்ளிக் கல்வித் துறையைச் சார்ந்த ரூ. 15 கோடியே 91 லட்சத்து 45 ஆயிரம் மதிப்பிலான 20 முடிவுற்ற திட்டப் பணிகளை தொடக்கி வைத்தார். 

ADVERTISEMENT

இதேபோல, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை, கால்நடை பராமரிப்புத் துறை, பழங்குடியினர் நலத் துறை, பொது சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை சார்பில் 117 புதிய பணிகளை ரூ. 69 கோடியே 89 லட்சத்து 79 ஆயிரம் மதிப்பில் அடிக்கல் நாட்டி முதல்வர் தொடங்கி வைத்தார்.

இதில் மாநில உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன், மாவட்ட ஆட்சியர் சு. மலர்விழி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags : TN CM
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT