தமிழ்நாடு

மேட்டூா் அணை நீா்மட்டம் 100 அடியை நெருங்குகிறது

20th Aug 2020 10:40 AM

ADVERTISEMENT


சேலம்: மேட்டூா் அணையின் நீா்மட்டம் 100 அடியை நெருங்குகிறது. 

கர்நாடக அணைகளின் உபரிநீர் வரத்து காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 34,366 கனஅடியாக அதிகரித்துள்ளது. 

கர்நாடக மாநிலத்தில் காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளிலும், கேரளமாநிலம் வயநாட்டிலும் பெய்த கனமழை காரணமாக அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பி உபரிநீர் காவிரியில் திறக்கப்பட்டது. 

கர்நாடக அணைகளின் நீர்வரத்து காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 1,40,000 ஆயிரம் கனஅடிவரை அதிகரித்தது. நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வந்ததால் மேட்டூர் அணையின் நீர் மட்டம் கிடுகிடுவென உயர்ந்து 99 அடியாக உயர்ந்தது. 

ADVERTISEMENT

அணையின்நீர் மட்டம் 100 அடியாக உயரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் காவியின் நீர் பிடிப்பு பகுதிகளில் மழை தனிந்தது. இதனால் கர்நாடக அணைகளின் உபரிநீர் திறப்பு குறைக்கப்பட்டது. கர்நாடக அணைகளின் உபரிநீர் திறப்பு குறைப்பு காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரியத்தொடங்கியது. 

நேற்று புதன்கிழமை காலை அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 7,079 கனஅடியாக சரிந்தது. அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கும் கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டதால் அணையின் நீர் மட்டம் சரிந்து புதன்கிழமை காலை மேட்டூர் அணையின் நீர் மட்டம் 97.94 அடியாக சரிந்தது.

இந்நிலையில், மீண்டும் காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. அணைகளின் பாதுகாப்பு கருதி காவிரியில் செவ்வாய்க்கிழமை உபரிநீர் திறக்கப்பட்டது. உபரிநீர் வரத்து காரணமாக மேட்டூர் அணைக்கு புதன்கிழமை காலை விநாடிக்கு 7,079 கனஅடி வீதம் வந்துகொண்டிருந்த நீர்வரத்து வியாழக்கிழமை காலை விநாடிக்கு 34,366 கனஅடியாக அதிகரித்துள்ளது. 

நீர்வரத்து அதிகரித்ததால் செவ்வாய்க்கிழமை காலை 97.94 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர் மட்டம் வியாழக்கிழணை காலை 99.10 அடியாக உயரந்துள்ளது. ஒரேநாளில் அணையின் நீர் மட்டம் 1.16 அடி உயர்ந்துள்ளது. 

அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு விநாடிக்கு 16,500 கனஅடியும், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு விநாடிக்கு 500 கனஅடியும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 63.68 டி.எம்.சியாக இருந்தது. 

நீர் வரத்தும் திறப்பும் இதே நிலையில் இருந்தால் நாளை மேட்டூர் அணையின்நீர் மட்டம் 100 அடியாக உயரும் வாய்ப்பு உள்ளது. நீர் வரத்து சரிந்தால் மேட்டூர் அணையின் நீர் மட்டம் 100 அடியாக உயரும் வாய்ப்பு தள்ளிப்போகும்.

Tags : metturdam
ADVERTISEMENT
ADVERTISEMENT