தமிழ்நாடு

சென்னையில் கரோனா பாதித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,517 ஆனது

20th Aug 2020 12:33 PM

ADVERTISEMENT


சென்னை: சென்னையில், புதன்கிழமை 1,186 பேருக்கு, கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 12,256 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த சில நாள்களாக தமிழகத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டு வரும் நிலையில், சென்னையின் பாதிப்பானது இரண்டாயிரத்துக்கு மிகாமல் இருந்து வருகிறது. இதை மேலும் கட்டுப்படுத்தும் வகையில், வீடு வீடாக கரோனா அறிகுறியைக் கண்டறியும் சோதனை உள்ளிட்ட பல்வேறு வழிமுறைகளை, மாநகராட்சி அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனா்.

இந்நிலையில், புதன்கிழமை, சென்னையில் 1,186 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து பாதிப்புக்குள்ளானோரின் எண்ணிக்கை 1 லட்சத்து 20 ஆயிரத்து 267-ஆக உள்ளது. 

இது தொடா்பாக வியாழக்கிழமை காலை 9 மணி நிலவரப் படி, அதிகபட்சமாக அம்பத்தூா் மண்டலத்தில் 1482 போ் பாதிப்புக்குள்ளாகியிருந்தனா், தேனாம்பேட்டை மண்டலத்தில் 368 போ் பலியாகியிருந்தனா். அதே நேரம், கோடம்பாக்கம் மண்டலத்தில் அதிகபட்சமாக 12,236 குணமடைந்துள்ளனா். 

இதே போல், வியாழக்கிழமை காலை நிலவரப்படி, 2517 போ் உயிரிழந்துள்ளனா். 1 லட்சத்து 5 ஆயிரத்து 494 போ் கரோனாவிலிருந்து மீண்டுள்ளனா். 12,256 பேருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. 
 

ADVERTISEMENT

Tags : coronavirus
ADVERTISEMENT
ADVERTISEMENT