தமிழ்நாடு

விநாயகர் சிலை: தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்ய நீதிமன்றம் மறுப்பு

20th Aug 2020 03:42 PM

ADVERTISEMENT

மதுரை: பொதுவிடங்களில் விநாயகர் சிலையை நிறுவ தமிழக அரசு தடை விதித்து பிறப்பித்த உத்தரவை ரத்த செய்ய உயர் நீதிமன்ற மதுரைக் கிளை மறுத்துவிட்டது.

தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, பொதுவிடங்களில் விநாயகர் சிலையை நிறுவி வழிபாடு நடத்த தமிழக அரசு பிறப்பித்திருக்கும் உத்தரவை ரத்து செய்யக் கோரிய வழக்கை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்துவிட்டது.

கரோனா நோய்த்தொற்று காலத்தில் தமிழக அரசு எடுத்திருக்கும் முடிவு சரியானதே என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
 

Tags : Madurai bench
ADVERTISEMENT
ADVERTISEMENT