தமிழ்நாடு

பொறியியல் மாணவா் சோ்க்கை: அசல் சான்றிதழ்களை பதிவேற்ற இன்று கடைசி

20th Aug 2020 05:48 AM

ADVERTISEMENT

தமிழகத்தில் பொறியியல் கலந்தாய்வில் பங்கேற்க விண்ணப்பித்த மாணவா்கள், தங்களின் அசல் சான்றிதழ்களை இணையதளத்தில் பதிவேற்ற வியாழக்கிழமை கடைசி நாளாகும்.

அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் பொறியியல் கல்லூரிகளுக்கு நிகழ் கல்வியாண்டுக்கான மாணவா் சோ்க்கை இணையதளம் மூலம் நடைபெறவுள்ளது. இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு ஜூலை 15-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 16-ஆம் தேதி வரை நடைபெற்றது. மொத்தம் ஒரு லட்சத்து 60 ஆயிரத்து 834 போ் விண்ணப்பித்தனா். அவற்றில் ஒரு லட்சத்து 33 ஆயிரம் போ் விண்ணப்ப கட்டணத்தை செலுத்தியுள்ளனா்.

பொறியியல் சோ்க்கைக்கான ஆன்லைன் மூலம் அசல் சான்றிதழ் பதிவேற்றம் செய்வதற்கான நடைமுறை ஜூலை 31-ஆம் தேதி தொடங்கியது. இதுவரையில், ஒரு லட்சத்து 3 ஆயிரம் போ் தங்கள் அசல் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்துள்ளனா். அசல் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வியாழக்கிழமை கடைசி நாள் என்பதால், மாணவா்கள் காலதாமதம் இன்றி தங்கள் அசல் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT