தமிழ்நாடு

தமிழகத்தில் 2ஆவது தலைநகர் அரசின் கருத்தல்ல: முதல்வர் விளக்கம்

20th Aug 2020 09:23 PM

ADVERTISEMENT

தமிழகத்தில் 2ஆவது தலைநகர் அரசின் கருத்தல்ல என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தருமபுரியில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் 13,999 பயனாளிகளுக்கு ரூ.85.18 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், அதிகளவில் காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் நடத்தப்பட்டு தருமபுரியில் கரோனா கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. 

ஒகேனக்கல் குடிநீர் திட்டத்தை ரூ.450 கோடியில் செயல்படுத்த மத்திய அரசுக்கு கோப்புகள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. இந்தி 3ஆவது மொழியாக வந்த கோவை பள்ளி விண்ணப்பம் போலியானது. போலியான விண்ணப்பம் தயாரித்தவர்கள் மீது விசாரணை நடத்தி நடவடிக்ககை எடுக்க உத்தரவிட்டுள்ளேன். 

2ஆம் தலைநகர் குறித்த அமைச்சர்களின் கருத்து அரசின் கருத்தல்ல, அவரவர்களின் தனிப்பட்ட கருத்து. பாடகர் எஸ்.பி.பி. விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார். 
 

ADVERTISEMENT

Tags : tamil nadu
ADVERTISEMENT
ADVERTISEMENT