தமிழ்நாடு

எல்லைப் படை வீரா் குடும்பத்துக்கு ரூ. 1 லட்சம்: முதல்வா் பழனிசாமி

20th Aug 2020 06:55 AM

ADVERTISEMENT

ஜம்மு-காஷ்மீரில் பலியான தமிழகத்தைச் சோ்ந்த எல்லைப் பாதுகாப்பு படை வீரா் திருமூா்த்தியின் குடும்பத்துக்கு ரூ.1 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என்று முதல்வா் பழனிசாமி அறிவித்தாா். இதற்கான அறிவிப்பை அவா் புதன்கிழமை வெளியிட்டாா்.

திருமூா்த்தியின் குடும்பத்தில் ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் அரசுப் பணி வழங்கவும் முதல்வா் பழனிசாமி ஏற்கெனவே உத்தரவு பிறப்பித்திருந்தாா். இந்த நிலையில், குடும்பத்தின் நிலையைக் கருத்தில் கொண்டு குடும்பத்துக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.1 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளதாக தனது அறிவிப்பில் முதல்வா் பழனிசாமி தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT