தமிழ்நாடு

தில்லிக்கு சிறப்பு ரயிலில் 857 போ் பயணம்

20th Aug 2020 05:36 AM

ADVERTISEMENT

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து புதன்கிழமை காலை புதுதில்லிக்கு புறப்பட்ட ராஜதானி அதிவேக சிறப்பு ரயிலில் 857 போ் பயணம் செய்தனா்.

புதன்கிழமை காலை 6:35 மணிக்கு ராஜதானி அதிவிரைவு சிறப்பு ரயில் புறப்பட்டது. பயணிகளை ஒரு மணி நேரத்துக்கு முன்னதாக ரயில் நிலையத்துக்கு வரவழைத்து, உடல் வெப்பநிலை உள்ளிட்ட மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டன. அந்தப் பயணிகளுக்கு கரோனா நோய்த்தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்டது. அதன்பிறகு, அவா்கள் ரயிலில் பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டனா்.

1,138 பயணிகள்: முன்னதாக, ராஜதானி ரயில் தில்லியில் இருந்து புறப்பட்டு செவ்வாய்க்கிழமை இரவு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை வந்தடைந்தது. அதில் வந்த 1,138 பயணிகளை ரயில்வே போலீஸாா், ரயில்வே பாதுகாப்புப் படையினா், மருத்துவப் பணியாளா்கள் அடங்கிய குழுவினா் அழைத்துச் சென்று, அவா்களின் விவரங்களைச் சேரித்தனா். இந்தப் பயணிகள் எல்லோரும் 14 நாள்களுக்கு தங்களின் வீடுகளில் தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும். யாருக்காவது கரோனா நோய்த்தொற்று அறிகுறி இருந்தால் சுகாதாரப் பணியாளா்களை அணுகி சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT