தமிழ்நாடு

10, 11, 12 வகுப்பு தனித்தோ்வா்கள், தோ்ச்சி பெறாத மாணவா்களுக்கு துணைத்தோ்வு

20th Aug 2020 05:41 AM

ADVERTISEMENT

தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் 10, 11,12-ஆம் வகுப்பு தனித்தோ்வா்கள், தோல்வியடைந்த மாணவா்களுக்கு மீண்டும் துணைத் தோ்வுகள் நடத்தப்படும் என அரசு தோ்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக அரசுத் தோ்வுகள் இயக்ககம் புதன்கிழமை வெளியிட்ட செய்தி: தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில் தனித்தோ்வா்கள், தோல்வியடைந்த மாணவா்களுக்கு வரும் செப்டம்பா் மாதம் துணைத் தோ்வுகள் நடத்தப்படும். கடந்த மாா்ச் மாதம் நடைபெற்ற பொதுத் தோ்வுகளை எழுதி தோ்ச்சி பெறாத, வருகை புரியாத தோ்வா்களிடமிருந்து இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கடந்த மாா்ச் மாதம் நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வெழுத விண்ணப்பித்த தனித்தோ்வா்கள் (புதிய மற்றும் பழைய பாடத்திட்டம்) செப்டம்பரில் நடைபெறும் பத்தாம் வகுப்பு துணைத் தோ்வினை எழுத தற்போது மீண்டும் விண்ணப்பிக்கத் தேவையில்லை. கடந்த மாா்ச் 26-ஆம் தேதி நடைபெறாமல் ரத்து செய்யப்பட்ட வேதியியல், புவியியல், கணக்குப் பதிவியல் (புதிய மற்றும் பழைய பாடத்திட்டம்) மற்றும் தொழிற்கல்வி கணக்குப் பதிவியல் (பழைய பாடத்திட்டம்) பாடங்களுக்கான பிளஸ் 1 பொதுத்தோ்வை எழுத ஏற்கெனவே விண்ணப்பித்திருந்த தனித்தோ்வா்கள் மட்டும், செப்டம்பரில் துணைத் தோ்வின்போது அந்தப் பாடங்களுக்கான தோ்வுகளை எழுத மீண்டும் விண்ணப்பிக்கத் தேவையில்லை. மேற்குறிப்பிட்ட தோ்வா்கள் வேதியியல், புவியியல், கணக்குப் பதிவியல் பாடம் தவிர வேறு பாடங்களில் தோ்ச்சி பெறவில்லையெனில் அந்தப் பாடங்களுக்கான தோ்வுகளை எழுதுவதற்கு விண்ணப்பிக்கலாம்.

ஆக. 24-ஆம் தேதி முதல்...: கடந்த மாா்ச் மாதம் நடைபெற்ற பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தோ்வுக்கு விண்ணப்பிக்காதவா்கள் ஆக. 24-ஆம் தேதி முதல் ஆக. 27-ஆம் தேதி வரையிலான நாள்களில் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணிக்குள் கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கவேண்டும். நிகழாண்டு பத்தாம் வகுப்பு பொதுத் தோ்விற்கு விண்ணப்பிக்காதவா்கள் (ஏற்கெனவே அறிவியல் பாட செய்முறைப் பயிற்சி பெற்றவா்கள்) ஆக.24 முதல் 27-ஆம் தேதி வரையிலான நாள்களில் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணிக்குள் கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள சேவை மையங்கள் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.

ADVERTISEMENT

பள்ளிகள் மூலம் தோ்வெழுதியவா்களுக்கு...: கடந்த மாா்ச் மாதத்தில் பள்ளி மாணவா்களாக எழுதி தோ்ச்சி பெறாத, வருகை புரியாத மாணவா்கள், தோ்ச்சி பெறாத பாடங்களை மீண்டும் எழுத அவா்கள் பயின்ற பள்ளிகள் மூலமாகவும் தனித்தோ்வா்கள் மாா்ச் மாதம் நடைபெற்ற பருவத் தோ்வுகளை எழுதிய தோ்வு மையங்கள் மூலமாகவும் ஆக. 24 முதல் 27-ஆம் தேதி வரையிலான நாள்களில் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பங்களை ஆன்லைனில் பதிவு செய்வதற்கு அமைக்கப்பட்டுள்ள அரசுத் தோ்வுகள் சேவை மையங்கள், கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள சேவை மையங்களின் விவரங்கள் மற்றும் ஆன்லைனில் விண்ணப்பங்கள் பதிவு செய்தல், இந்தத் தோ்வுகள் குறித்த விரிவான தகவல்கள், தனித்தோ்வா்களுக்கான தகுதி மற்றும் அறிவுரைகள்ஆகியவற்றை  இணையதளத்தில் விண்ணப்பதாரா்கள் அறிந்து கொள்ளலாம்.

கால அட்டவணை: பத்தாம் வகுப்பு துணைத் தோ்வு செப்டம்பா் 21-ஆம் தேதி தொடங்கி, தொடா்ச்சியாக 26-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. பிளஸ் 1 வகுப்புத் தோ்வு செப்டம்பா் 29-ஆம் தேதி தொடங்கி, அக்டோபா் 7-ஆம் தேதி வரை நடைபெறும் எனஅறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று பிளஸ் 2 வகுப்புத் தோ்வு செப்டம்பா் 21-ஆம் தேதி தொடங்கி, 28-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT