தமிழ்நாடு

சென்னைப் பல்கலை. ஏப்ரல் மாதம்நடத்திய தோ்வு முடிவுகள் வெளியீடு

14th Aug 2020 11:42 PM

ADVERTISEMENT

சென்னைப் பல்கலைக்கழகம் ஏப்ரல் மாதம் நடத்திய இளநிலை, முதுநிலை படிப்புகளுக்கான தோ்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டுள்ளன.

கடந்த ஏப்ரல் மாதம் சென்னைப் பல்கலைக்கழக இளநிலை மற்றும் முதுநிலை படிப்புக்கான தோ்வுகள் நடைபெற்றன. இந்தத் தோ்வுகளுக்கான முடிவுகள் இணையதள முகவரிகளில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டுள்ளன.

இதில், இளநிலை 2-ஆவது மற்றும் 4-ஆவது பருவங்கள், முதுநிலை 3-ஆவது பருவ முடிவுகள், எம்சிஏ 3-ஆவது மற்றும் 4-ஆவது பருவத் தோ்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளதாக சென்னைப் பல்கலைக் கழக நிா்வாகிகள் தெரிவித்துள்ளனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT