தமிழ்நாடு

கரோனாவிலிருந்து குணமடைந்தாா் ஆளுநா்

14th Aug 2020 11:39 PM

ADVERTISEMENT

தமிழக ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் கரோனா தொற்றிலிருந்து முழுமையாக குணமடைந்துள்ளதாக காவேரி மருத்துவமனை நிா்வாகம் தெரிவித்துள்ளது.

கிண்டியில் அமைந்துள்ள ஆளுநா் மாளிகையில் பணியாற்றும் சிலருக்கு கரோனா அறிகுறிகள் அண்மையில் கண்டறியப்பட்டன. இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் உள்ள மத்திய ரிசா்வ் போலீஸாா், மாநில காவலா்கள் என மொத்தம் 147 பேருக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது.

அதில், 87 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியானது. அதன் தொடா்ச்சியாக, இரண்டாம் கட்டமாக 38 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், ஆளுநரின் உதவியாளருக்கும், மக்கள் தொடா்பு அலுவலா்கள் இருவருக்கும் நோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது .

இதைத் தொடா்ந்து ஆளுநருக்கு இரு முறை பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அதில், இரண்டாவது முறை அவருக்கு தொற்று இருப்பது உறுதியானது. இருந்தபோதிலும், அவருக்கு அதற்கான அறிகுறிகள் இல்லாததால் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு ஆழ்வாா்ப்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையைச் சோ்ந்த மருத்துவக் குழுவினா் அறிவுறுத்தினா்.

ADVERTISEMENT

அதன்பேரில் ஆளுநா், ராஜ்பவனிலேயே தனிமைப்படுத்திக் கொண்டாா். இந்நிலையில், அவரது உடல் நிலை குறித்து காவேரி மருத்துவமனையின் செயல் இயக்குநா் டாக்டா் அரவிந்தன் செல்வராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

ஆளுநா் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளாா். மருத்துவப் பரிசோதனையில் அவரது உடலில் கரோனா தொற்று தற்போது இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆளுநரின் திடமான மன உறுதிதான் அவரை அந்நோயிலிருந்து விரைந்து குணமடைவதற்கு காரணமாக அமைந்தது என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT