தமிழ்நாடு

கரோனா காலத்தில் ஜோதி நகர் அரசுப் பள்ளி வளாகத்தில் தோட்டவேலை செய்த பள்ளி ஆசிரியர்கள்

14th Aug 2020 12:56 PM

ADVERTISEMENT


கரோனா காலத்தில் ஜோதி நகர் அரசுப் பள்ளி வளாகத்தில் தோட்டவேலை செய்த பள்ளி ஆசிரியர்களுக்கு ஊர் பொது மக்களும் வாழ்த்துகளை பகிர்ந்துக் கொண்டதோடு, இந்த கல்வி ஆண்டில் அதிக மாணவர்கள் பள்ளியில் புதிதாகச் சேர்வதற்கும் இச் செயல்பாடுகள் துணை புரியும் எனவும் கூறினர்.

ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கடந்த ஒருவார காலமாக மதிய உணவு எடுத்துக்கொண்டு பள்ளிக்குச் சென்று வருகிறார்கள் ஆசிரியர்கள் பள்ளி தலைமை ஆசிரியர் செ. இராஜேந்திரன் அவர்களின் வழிகாட்டலின் பேரில் உதவி ஆசிரியர்கள் மு. இலட்சுமி, வே. இராஜ்குமார், ஜி.எம் சிவக்குமார் உள்ளிட்ட ஆசிரியர்கள், தினமும் தமது சுய விருப்பத்துடனும், பள்ளியின் எதிர்காக வளர்ச்சியை கருத்தில் கொண்டும் பள்ளிக்குச் சென்று தமது பள்ளியில் புதிதாக பல்வகை மலர்த் தோட்டம், மூலிகைத் தோட்டம், காய்கறித் தோட்டம், அழகுச் செடிகள் தோட்டம் மற்றும் இயற்கை உரம் தயாரிப்பு எனப் பல்வேறு வகையான பள்ளிப் பணிகளை மாணவர்கள் உள்ளிட்ட எவரின் துணையும் இன்றி ஆசிரியர்கள் மட்டுமே மேற்கொண்டு வருகின்றனர். 

ADVERTISEMENT

இதில் பல்வகை அழகிய தொட்டிகளில் செடிகளை வைத்தும், பள்ளி வளாகத்தில் உள்ள கடினமான நிலத்தைத் தோண்டி அதில் செடிகள் வைப்பது என பல்வேறு பணிகளை விருப்பத்துடனும், அர்ப்பணிப்பு உணர்வுடனும் மேற்கொண்டு வருகிறார்கள்.

மேலும் கெங்கபிராம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் தி. வெங்கடேசன் அவர்களின் ஒத்துழைப்பின் பேரில் ஊராட்சி துப்புரவுப் பணியாளர்களின் உதவியுடன் பள்ளி வளாகம் முழுமையும் சுத்தம் செய்தனர்.

இதை கண்ட பெற்றோர்களும், ஊர் பொது மக்களும் மிகுந்த மகிழ்ச்சியையும், வாழ்த்துகளையும் பகிர்ந்துக் கொண்டதோடு இக்கல்வி ஆண்டில் அதிக மாணவர்கள் பள்ளியில் புதிதாகச் சேர்வதற்கும் இச் செயல்பாடுகள் துணை புரியும் எனவும் கூறினர்.
 

Tags : garden
ADVERTISEMENT
ADVERTISEMENT