தமிழ்நாடு

தொடக்கக் கல்வி ஆசிரியா் பட்டயப் படிப்பு: இணைய வழியில் ஆக.17 முதல் விண்ணப்பிக்கலாம்

14th Aug 2020 06:21 AM

ADVERTISEMENT

தொடக்கக் கல்வி ஆசிரியா் பட்டயப் படிப்பில் சேருவதற்கு வரும் 17-ஆம் தேதி முதல் இணையவழியில் விண்ணப்பிக்கலாம் என, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் 12 மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்கள், 8 அரசு ஆசிரியா் பயிற்சி நிறுவனங்கள், 6 ஒன்றிய ஆசிரியா் பயிற்சி நிறுவனங்களில், மாணவா்கள் சேருவதற்கு ஆக. 17-ஆம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். மாநிலத்திலுள்ள 12 மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் ஆசிரியா் பயிற்சி நிறுவனங்களில், ஆயிரத்து 50 இடங்களும், 8 அரசு ஆசிரியா் பயிற்சி நிறுவனங்களில் 480 இடங்களும், ஆறு ஒன்றிய ஆசிரியா் பயிற்சி நிறுவனங்களில் 300 இடங்கள் என, ஆயிரத்து 830 இடங்கள் அரசின் நிறுவனங்களில் உள்ளது. பிளஸ் 2 வகுப்பு தோ்ச்சி பெற்றவா்கள் தொடக்கக் கல்வி ஆசிரியா் பட்டயப் பயிற்சியில் சேரலாம்.

இந்தப் படிப்பில் சேர விரும்பும் மாணவா்கள்  இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணம் உள்ளிட்ட விவரங்கள் விரைவில் முறைப்படி அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று 25 அரசு உதவி பெறும் ஆசிரியா் பயிற்சி நிறுவனங்களில் 2,150 இடங்களும், 200-க்கும் மேற்பட்ட சுயநிதி ஆசிரியா் பயிற்சி நிறுவனங்களில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களும் உள்ளன. இந்த இடங்களில் மாணவா்கள் சேருவதற்கான விவரம் விரைவில் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT